அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கிராமங்களுக்குள் யானைகள் படையெடுக்க ஆரம்பித்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அங்கு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் காடழிப்பு நடவடிக்கைகள் காரணமாக யானைகள் காடுகளிலிருந்து வெளியேறி மக்களின் வாழ்விடங்களை நோக்கி வர ஆரம்பித்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 23 ஆம் திகதி வீரகெட்டியப் பிரதேசத்தில் இரண்டு காட்டு யானைகள் வந்தமை குறிப்பிடத்தக்கது.
அதனால் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்று வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.