ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள எல்லைப் பாதுகாப்பு படை முகாமின் மீது இன்று அதிகாலை 4 மணியளவில் தற்கொலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தயுள்ளனர்.
ஒரு பயங்கரவாதி மட்டும் தற்கொலை வெடிகுண்டை வெடிக்க செய்து உள்ளதுடன் அந்த பயங்கரவாதி உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதி யார் என அடையாளம் காணப்படவில்லை, மீதம் உள்ள பயங்கரவாதிகள் அங்கு உள்ள கட்டிடத்திற்குள் மறைந்த வண்ணம் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதல் நடத்தப்படவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சண்டையில் மூன்று பாதுகாப்புப் படை வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர், தொடர்ச்சியாக அங்கு துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள பாதுகாப்பு படை முகாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், விமான சேவையானது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
விமான நிலைய ஓடுதளத்திலும் பாதுகாப்பு கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் மத்திய ரிசர்வ் படை பொலிஸ்அதிகாரிகளின் பயிற்சி மையங்கள் மற்றும் வீடுகள் அமைந்துள்ளன.
பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து காஷ்மீர் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
ஸ்ரீநகர் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படும் பயணிகள் மிகுந்த சோதனைக்கு பின்னரே உள்ளே அனுப்பப்படுகின்றனர்.
அங்கு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. மிகவும் பாதுகாப்பு மிகுந்த, நகரில் முக்கிய இடத்தில் அமைந்து உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.