ஜம்மு காஷ்மீரின் அமைதியைப் பாதிக்கும் செயல்களை நிறுத்த வேண்டும் என்று இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஐநா பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியா குட்ரெஸ் விடுத்துள்ள அறிக்கையில், ஜம்மு காஷ்மீரின் தற்போதைய சூழலை ஆழ்ந்த கவலையுடன் கவனித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பான 1972 ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார். தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் அமைதியைப் பாதிக்கும் செயல்களை நிறுத்த வேண்டும் என்று இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.