காவல்துறையினரின் விடுமுறையை 15 வரை இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பிரதிப் காவல்துறை மா அதிபரும், காவல்துறை ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் நிலைமையை தொடர்ந்து காவல்துறை உத்தியோகத்தர்களின் விடுமுறையை மே 17முதல் 31 ஆம் திகதி வரை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொடர்ந்தும் பயண கட்டுப்பாடுகள் அமுல் படுத்தப்படுவதால் காவல்துறையினரின் விடுமுறையை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.