அநுராதபுரம், புனித பூமியில் பத்திரகாளியம்மன் ஆலயத்திலுள்ள காளியம்மன் சிலையில் தங்கத்தால் பொறிக்கப்பட்டிருந்த கண்கள் களவாடப்பட்டுள்ளன.
கோவிலில் வைக்கப்பட்டிருந்த பத்திரகாளியம்மன் சிலையானது 100 வருடங்கள் பழைமையானது என்று பக்தர்கள் தெரிவிக்கின்றனர். பக்தர் ஒருவரால் வழங்கப்பட்ட நன்கொடை மூலமே தங்கக் கண்கள் பொருத்தப்பட்டன.
பத்திரகாளியின் கண்கள் களவாடப்பட்டுள்ளதால் பக்தர்கள் கடும் சீற்றத்தில் இருக்கின்றனர். திருடர்கள் விரைவில் இறை சாபத்துக்கு உள்ளாவார்கள் என்றும் நம்புகின்றனர்.
இது தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.