பாம்பு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள காளியம்மன் சிலை மீது ஏறி சிலையில் படம் எடுத்து ஆடியது. இதை பார்த்த பொதுமக்கள் மெய் சிலிர்த்து அந்தப் பாம்பை வழிபட்டனர்.
ஈரோடு மாணிக்கம் பாளையத்தில் குடியிருப்புக்கு மத்தியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் இந்த கோவிலுக்குள் 5 அடி நீள நாகபாம்பு ஒன்று வந்தது. அந்த பாம்பு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள காளியம்மன் சிலை மீது ஏறி சிலையில் படம் எடுத்து ஆடியது. இதை பார்த்த பொதுமக்கள் மெய் சிலிர்த்து அந்தப் பாம்பை வழிபட்டனர்.
மேலும் பூசாரி வந்து பூஜை செய்து கற்பூரம் ஏற்றி காட்டினார். இந்த செய்தி அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. சிறிது நேரத்தில் அந்த கோவில் முன்பு ஏராளமான மக்கள் கூடிவிட்டனர்.
இதுகுறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜ் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் சம்பவ இடத்துக்கு வந்து அம்மன் சிலை மீது அமர்ந்திருந்த நாகப்பாம்பை பிடித்து சாக்கு பையில் போட்டார். பின்னர் அந்த பாம்பை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டார். இதனால் சிறிது நேரம் கோவில் வளாகத்தில் பரபரப்பு நிலவியது.