கால் முறிந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்ட பெண்
ரொறன்ரோவின் ஸ்காபரோ பகுதியில் கால் முறிவடைந்த நிலையில் இருந்த பெண் ஒருவர் கனேடியப் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். அவர் டன்போர்த் வீதி மற்றும் எங்லிங்டன் ஒழுங்கையில் வைத்து நேற்று அதிகாலை வேளையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சுமார் 30 வயது மதிக்கத்தக்க உள்ள குறித்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்து, அவருக்கு அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், இந்தக் காயம் காரணமாக அவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் அவசர மருத்துவ பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொலிஸார், கால் முறிவடைந்த பெண்ணை வாகனம் ஒன்று மோதியிருக்கலாம். பின்னர் அந்த வாகனம் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றிருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது’ என்று தெரிவித்தனர்.
ரொறன்ரோ பொலிஸாரின் போக்குவரத்து கண்காணிப்பு பிரிவினர் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தற்பொழுது மேற்கொண்டு வருகின்றனர்.