ஆரஞ்சு பழத்தில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள், சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
ஆரஞ்சு பழ ரசம் – தேவையான பொருள்கள்:
ஆரஞ்சு பழம் -2
பருப்பு தண்ணீர் – 2 கப்
கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு
ப.மிளகாய் -2
கொத்தமல்லி – சிறிதளவு
பெருங்காயம், மஞ்சள் தூள் – தாளிக்க
மிளகு சீரகம் – 1 ஸ்பூன் (பொடித்தது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டீஸ்பூன்
செய்முறை:
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஆரஞ்சு பழ சுளைகளை உரித்து 4 சுளைகளை தனியாக எடுத்து வைத்து விட்டு மீதியை பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும்.
பருப்பு தண்ணீருடன் கொத்தமல்லி, ஆரஞ்சு சுளைகள், ப.மிளகாய், மஞ்சள் தூள், பொடித்த மிளகு சீரகம், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
சிறிது நேரம் கழித்து தீயை குறைத்து ஆரஞ்சு சாறை விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து செய்து வைத்துள்ள ரசத்தில் கொட்டவும்
சூப்பரான ஆரஞ்சு ரசம் ரெடி.