கொழும்பைச் சூழவுள்ள சில பகுதிகளில் இன்று (30) காலை 8.00 மணி முதல் 11 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென நீர்விநியோக, வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இந்தவகையில், களனி, பேலியகொட, மஹர, வத்தளை, பியகம, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய பிரதேசங்களில் 11 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் சபை மேலும் தெரிவித்துள்ளது.