சென்னை: காலை 11 முதல் மாலை 3.30 மணிவரை மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
நாளை முதல் (மே 2) அக்னி நட்சத்திரம் தொடங்கும் நிலையில், இன்று முதல் மே 3-ம் தேதி வரை வட தமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை மாவட்ட நிர்வாகம் வெப்பத்தில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்வது தொடர்பான சில ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி சென்னை மாவட்டத்தை சேர்ந்த மக்கள், காலை 11மணிமுதல் மாலை 3.30 மணிவரைவெளியில் வருவதை தவிர்க்கவேண்டும். மிகவும் இலகுவான, எளிதில் செரிக்கும் உணவுகளை, குறிப்பாக பழங்கள், காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம். அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.மதுபானங்களை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது.