இந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வில்லியம் நோர்தாஸ் (William Nordhaus) மற்றும் போல் ரோமர் (Paul Romer) ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சிக்காக அவர்கள் ஆற்றிய பணியை கெளரவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ்விரு அமெரிக்க பொருளாதார வல்லுனர்களும் காலநிலை மாற்றம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை எவ்வாறு பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பது குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.
யேல் (Yale) பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான நோர்தாஸ், பொருளாதாரம் மற்றும் காலநிலை ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திய ஒரு மாதிரியை முதல் தடவையாக உருவாக்கியுள்ளார்.
1970 களில் காலநிலைமாற்றம் குறித்த கவலைகள் முதன்முறையாக தலைதூக்கியபோது கொள்கை வகுப்பாளர்களால் உருவாக்கப்பட்ட பொருளாதாரமாதிரிகள் புவிவெப்பமயமாதலின் தாக்கத்தை கருத்தில்கொண்டிருக்கவில்லை என்பதை இவர் சுட்டிக்காட்டினார்.
வில்லியம் நோர்தாஸ் சுற்றுச்சூழல் பொருளாதாரத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.
நியுயோர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ரோமர் நிறுவனங்களின் புதியசக்திகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் மீதான பொருளாதாரசக்திகளின் ஆதிக்கம் குறித்து கண்டறிந்துள்ளார்.
இவர் உள்ளார்ந்த வளர்ச்சி கோட்பாட்டின் பிரதான பணிப்பாளராகக் கருதப்படுகிறார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுமை மற்றும் திறமை போன்ற விநியோக நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினால் நாடுகள் அவற்றின் அடிப்படைச் செயல்திறனை மேம்படுத்தமுடியும் என்பதே இக்கோட்பாடாகும்.