இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் புகை நச்சுமண்டலத்தால் கடந்த 10 நாட்களாக அவதியுற்று வருகிறது.
வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும் சமீபத்தில் தீபாவளி பண்டிகையால் பொதுமக்கள் வெடித்த பட்டாசும் தான் காரணம் என தெரியவந்துள்ளது.
டெல்லி மாநில அரசு முதற்கட்டமாக பாடசாலை, கல்லூரிகளுக்கு மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை அறிவித்துள்ளது.
அதேபோல் அனைத்து நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தி உள்ளது.
கட்டுமானப் பணிகளுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
15 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படும் பெற்றோல், டீசல் வாகனங்களை இயக்கவும் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300 கிலோ மீற்றர் தொலைவுக்குள்ள அனல்மின்நிலையங்களில் ஐந்தை தவிர மற்றவைகளை நவம்பர் 30 வரை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
மேலும் வீதிகளில் கட்டுமானம் மற்றும் இடிபாடுகள் சம்பந்தப்பட்ட பொருட்களை கொட்டினால் அபராதம் விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]