வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம், சிறிலங்காவை நெருங்கியுள்ள நிலையிலும், சூறாவளி தாக்கும் ஆபத்து ஏதும் இல்லை என்று சிறிலங்காவின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று -06- அதிகாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம், தற்போது சிறிலங்காவில் இருந்து 800 கி.மீ தொலைவில் இருப்பதாகவும், இன்னும் 12 மணிநேரத்தில் அது வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளது.
அந்த சிறிலங்காவுக்கு வடமேற்காக நகர்வதாகவும், இதனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும், வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்களில் மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.