காற்றடைத்த மெத்தையில் நீந்தி கனடா வந்தவருக்கு இரு வருட சிறை தண்டனை
கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமைக்காக அமெரிக்க இளைஞர் ஒருவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
25 வயதாகும் John Bennett என்பவர், காற்றடைத்த மெத்தையொன்றில், அமெரிக்காவின் Maine மாநிலத்தில் உள்ள St. Croix ஆற்றைக் கடந்து, கனடாவின் New Brunswick மாகாணத்தை வந்தடைந்ததையடுத்து இவர் கைது செய்யப்பட்டார்.
இதைதொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட John Bennett கருவுற்றிருக்கும் தனது பெண் நண்பியின் பாதுகாப்பை இட்டு தான் கவலை அடைந்திருந்ததாகவும், அதன் காரணமாகவே தான் கனடாவிற்கு வந்ததாகவும் கூறினார். ஆனால் இதை ஏற்காத நீதிமன்றம் அவருக்கு இரு வருட சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
ஆனால், அமெரிக்காவில் அவர் குறும்புச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுப்பதால் சுங்க அதிகாரிகள் அவருக்கு கனடா செல்ல அனுமதி மறுத்ததாக கூறப்படுகின்றது.