கார் வெடிகுண்டு சதி முறியடிப்பு: பிரான்சில் மீண்டும் பரபரப்பு
பாரிஸ் நகரில் அமைந்துள்ள சிறப்பு மிக்க Notre Dame கதீட்ரல் அருகே கைவிடப்பட்ட நிலையில் இருந்த வாகனத்தில் இருந்து ஒரு வித வெளிச்சம் வந்துள்ளது.
இதனையடுத்து அந்த வாகனத்தை சோதனையிட்ட தீவிரவாத எதிர்ப்பு பொலிசார் அதில் இருந்து 7 எரிவாயு உருளைகளை கைப்பற்றியுள்ளனர். ஆனால் தீவிர சோதனைக்கு பின்னர் அந்த உருளைகளுடன் டெட்டனேட்டர்கள் எதுவும் இல்லை என்பதை பொலிசார் உறுதிப்படுத்தினர்.
இதனையடுத்து அந்த வாகனத்தின் உரிமையாளரை தேடிப்பிடித்த பொலிசார் அவரது உதவியாளர் ஒருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட வாகனத்தில் இருந்து டெட்டனேட்டர்கள் எதுவும் சிக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி வாகனத்தில் இருந்து அரேபிய மொழியில் எழுதப்பட்ட குறிப்புகள் சிலவற்றை பொலிசார் கைப்பற்றியுள்ளதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட கதீட்ரலானது பாரிஸ் நகரில் வரும் சுற்றுலாப்பயணிகள் பெரும்பாலானோர் வந்து செல்லும் பகுதிகளில் ஒன்று. ஆண்டுக்கு 13 மில்லியன் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
பிரான்சில் கடந்த ஆண்டு துவக்கம் முதல் நடத்தப்படும் தொடர் தாக்குதலை அடுத்து தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக உச்சகட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நைஸ் நகரத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை அடுத்து பாதிரியார் ஒருவரும் ஜிகாதிகளால் கொல்லப்பட்டார்.
2015 ஆண் ஆண்டில் பாரிஸ் நகர தாக்குதலுக்கும் ஐ.எஸ் பொறுப்பேற்றுள்ள நிலையில் பிரான்ஸ் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.