காரில் குழந்தை முன்னே தாயை கற்பழித்த கொடூரர்கள்: பிரித்தானியாவில் அரங்கேறிய சம்பவம்
பிரித்தானியாவில் குழந்தை முன்னே தாயார் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் வடக்கு யார்க்சர் நகரத்தின் ரெட்கார் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை 11.30 மணியிலிருந்து 12.30 மணிக்கு இடைவெளியில், காரில் முப்பது வயது மதிக்கத்தக்க பெண்ணும், அவரது குழந்தையும் சென்றுள்ளனர்.
அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர்கள் காரை வழிமறித்துள்ளனர். இதனால் அப்பெண் காரை நிறுத்தியவுடன் அந்த நபர்கள் காரின் உள்ளே இருந்த பெண்ணை சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளனர்.
இதை அவர்கள் காரின் உள்ளே இருந்த குழந்தை முன் செய்துள்ளனர். அதன் பின் அவர்கள் சுமார் 5.30 மணியில் இருந்து 6.30 மணிக்கு இடைவெளிக்குள் காரை கிர்க்கலெதம் லென் பகுதியில் நிறுத்திவிட்டு ஓடியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் குழந்தைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவும் அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள் இருவர் எனவும் கூறப்படுகிறது.
அவர்களில் ஒருவருக்கு 20 வயது இருக்கும் என்றும் மற்றொருவருக்கு 30 வயது இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் 5 முதல் 10 அடி வரை இருப்பார் என்றும் மற்றொருவர் 5 முதல் 6 அடி வரை இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்றும் இதனால் அவர்கள் குறித்து ஏதேனும் தகவல் அறிந்தால் உடனடியாக தகவல் அளிக்கும் படி பொலிசார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.