காம்பீர் மீண்டும் இந்திய அணிக்கு வருவதற்கு யார் காரணம் தெரியுமா?
இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 197 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆபார வெற்றி பெற்றது.
இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற 30 ஆம் திகதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதற்கான இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணியில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் ராகுல் முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார்.
ராகுலுக்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக மாற்று வீரராக வந்த தவானுக்கு பில்டிங்கின் போது காயம் ஏற்பட்டதால் அவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார்.
இந்நிலையில் இந்திய அணிக்கு தொடக்க வீரராக மீண்டும் களமிறங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு காம்பிருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இந்திய அணியின் பயிற்சியாளர் கும்ளே தான் காரணம் என கூறப்படுகிறது.
இது குறித்து கும்ளே கூறுகையில், கவுதம் காம்பீர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது நல்ல விஷயம் என்று நினைக்கிறேன். உள்நாட்டு மைதானங்களில் காம்பீர் சிறப்பாக விளையாடி இருக்கிறார். இதனால் தான் அவர் தெரிவு செய்யப்பட்டார்.
தெரிவு செய்யப்பட்டுள்ள 15 பேரில் யாரையும் வெளியே இருக்க வைக்கும் விருப்பம் தனக்கு இல்லை எனவும் கூறியுள்ளார்