ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்ட 13 சேவை உறுப்பினர்களின் மரணத்திற்குப் பழிவாங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வியாழக்கிழமை உறுதியளித்தார்.
வெள்ளை மாளிகையில் உணர்ச்சியுடன் பேசிய பைடன், தாக்குதலுக்கு காரணமான இஸ்லாமிய அரசுடன் (ஐஎஸ்) இணைந்த தீவிரவாதிகள் காரணம் என்பதை உறுதி செய்தார்.
அதேநேரம் அமெரிக்கா இந்தச் செயலை மறக்கவோ மன்னிக்கவோ மாட்டாது என்றும் கூறினார்.
ஆப்கானிஸ்தானின், காபூல் விமான நிலையத்திற்கு வெளியே வியாழக்கிழமை இடம்பெற்ற இரண்டு சக்திவாய்ந்த குண்டு வெடிப்புகளினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.
குறைந்தது 60 ஆப்கானியர்களும் 13 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் டஜன் கணக்கானோர் காயமடைந்தனர் என்று மருத்துவ ஆதாரங்களும் அமெரிக்க அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.