காபூல் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் ஒரு ஜெர்மன் பிரஜையொருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
எனினும் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை. விரைவில் காபூலிலிருந்து அவரை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெர்மன் அமைச்சரவை பேச்சாளர் உல்ரிக் டெம்மர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தலிபான்கள் காபூல் நகரை கைப்பற்றிய பின்னர் எமது பிரஜைகளை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வதறானதொரு நிலையில் எமது பிஜையொருவர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்துள்ளார். தற்போது அவர் அங்கு சிகிச்சைகளை பெற்று வருகின்றார்.
1,000 ஆப்கானியர்கள் உட்பட மொத்தம் 1,600 பேர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.