ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்றுள்ள கார் குண்டு வெடிப்பில், மூவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காபூலிலுள்ள வெளிநாட்டு ஒப்பந்தக்கார நிறுவனமொன்றை இலக்குவைத்து இன்று (சனிக்கிழமை) இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் பொதுமக்களே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிறுவனத்தில் பணியாற்றும் எவரும் பாதிப்படையவில்லையெனவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவத்துக்கு இதுவரையில் எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லையெனத் தெரிவித்துள்ள பொலிஸார், விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.