கான்ஸ்டபிள் ஜேம்ஸ் வோசிலியோவிற்கு சமி யற்ரிம் என்பவரை சுட்ட குற்றத்திற்காக 6வருடங்கள் சிறைத்தண்டனை.
கனடா-.ரொறொன்ரோ பொலிஸ் அதிகாரி ஒருவர் வாலிபன் ஒருவனை வெறுமையான தெருக்கார் ஒன்றிற்குள் வைத்து 3 வருடங்களிற்கு முன்னர் சுட்ட குற்றத்திற்காக ஆறுவருடங்கள் சிறைத்தண்டனையை நீதிபதி வழங்கியுள்ளார்.
சட்ட அமுலாக்கம் மற்றும் நீதி துறையில் பொதுமக்களின் நம்பிக்கையை குறித்து மதிப்பிடும் வகையில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என வியாழக்கிழமை தெரிவித்த நீதிபதி ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்தார்.
18வயது சமி யரிம் என்பவரை சுட்ட சம்பவம் மூலம் கான்ஸ்டபிள் ஜேம்ஸ் வொசிலியோ அதிர்ச்சியான நம்பிக்கை மீறலை செய்துள்ளார் இவரது தண்டனை மற்றய பொலிஸ் அதிகாரிகளிற்கு துப்பாக்கி பிரயோகம் ஒரு இறுதி கட்டமாகவே இருக்க வேண்டும் என விடுக்கும் ஒரு அறிவிப்பாகவும் அமையும் நீதிபதி எடவேட் தென் தெரிவித்தார்.
சமியின் தாயார் பொலிஸ் அதிகாரி தங்கள் குடும்பத்தை அழித்து விட்டார் என தெரிவித்தார்மகனின் இழப்பை தாயாரால் தாங்கிகொள்ள முடியவில்லை.
2013 யூலை 27இடம்பெற்ற யரிமின் மரணம் ஒரு செல்போன் வீடியோ மூலம் பரவியதும் பொதுமக்களின் சீற்றம் தூண்டப்பட்டது.
பொலிஸ் அதிகாரி ஜாமின் விண்ணப்பம் செய்துள்ளார்.இதன் முடிவு வெள்ளிக்கிழமை தெரிய வரும் என கூறப்படுகின்றது.
தண்டிக்கப்பட்ட பின்னர் ஊதியமற்ற பணிநிறுத்தம் செய்யப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.