காத்திருக்கும் பேராபத்து! விஞ்ஞானிகள் எச்சரிக்கை
இதனால் பெரும்பாலான உலக நாடுகள் கடும் திண்டாட்டங்களை எதிர்நோக்க ஆரம்பித்துள்ளன.
இப்படியிருக்கையில் 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 195 நாடுகள் இணைந்து பாரிஸ் உன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
இவ் உடன்படிக்கையின் பிரகாரம் தமது நாடுகளின் வெப்பநிலையை தற்போது உள்ள வெப்ப நிலையை விடவும் 2 டிகிரி செல்சிஸை தாண்டி அதிரிக்காது பார்த்துக்கொள்ள வேண்டும்.
எனினும் இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது தொடர்பில் சந்தேககங்களே நிலவுகின்றன.
இதற்கு காரணம் மனிதர்களின் பொறுப்பற்ற செயல்பாடு தொடர்வதாகும்.
இந் நிலையில் ஆய்வாளர் குழு ஒன்று பல்வேறு நாடுகளிலும் வெப்பநிலை தொடர்பாக நீண்டகால தரவுகளைத் திரட்டி ஆய்வு செய்து வருகின்றது.
இதன்படி பூகோள வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து செல்லுமாயின் ஸ்பெயின் நாட்டிலுள்ள ஒரு பகுதி விரைவில் பாலைவனமாகும் ஆபத்து காணப்படுவதாக எச்சரித்துள்ளது.
ஏனைய நாடுகளிலும் இந் நிலைமை தோன்றுவதற்கு நீண்ட காலம் எடுக்காது, எனவே சிந்தித்து செயற்படுவோம்.