காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்களுள் ஒரு பொலிஸ் உத்தியோகததரும் இரு சிவில் பாதுகாப்பு படைவீரர்களும் அடங்குகின்றனர்.
இம்மாத ஆரம்பத்தில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 32 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, இங்கு கடமையாற்றிய சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுய தனிமைப்படுத்தலில் இருந்தனர்.
இதனால் பொலிஸ் நிலையத்தின் பணிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தற்போது முன்னெடுக்க்பட்டு வருகின்றன.
இதேவேளை, புதிய காத்தான்குடி பிரதேசத்திலுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் காத்தான்குடியிலுள்ள தெரிவுசெய்யப்பட்ட சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், காத்தான்குடி 6ஆம் குறிச்சி 162 கிராம உத்தியோகத்தர் பிரிவு, 164 பி கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலை மண்டபத்தில் இன்று (13) தடுப்பூசி போடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.