கோரமான முகம் கொண்டவரை அழகான இளம் பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புன்மீ (21) என்ற இளம் பெண் வயதான நபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட ஒளிப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.
இளம் பெண் அழகாக இருந்த நிலையில் அந்த நபரின் முகம் கோரமாகவும், பெண்ணை விட வயதானவராகவும் காட்சியளித்தார்.
இது உண்மையா என கேள்வியெழுந்த நிலையில் அது உண்மை தான் என்று புன்மீ தனது முகப்புத்தகத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்த பதிவில் எளிமையான முறையில் குறித்த நபரை திருமணம் செய்து கொண்டதாக புன்மீ தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முகம் கோரமாக இருப்பதோடு, பணம் எதுவும் இல்லாத ஏழையாக இருந்தாலும் இருவருக்கும் இடையில் உள்ள அதீத காதலால் அவரை திருமணம் செய்து கொண்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.