விஜயசேதுபதி-கெளதம் கார்த்திக் நடித்து திரைக்கு வந்துள்ள படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். இந்த படத்தில் செளமியா என்ற நாயகிவேடத்தில் நடித்திருப்பவர் நிகாரிகா கோனிடெலா. இவரது ரொமான்ஸ் மற்றும் துணிச்சலான நடிப்பு தியேட்டர்களில் கைதட்டல் பெற்று வருகிறது. இந்த நிகாரிகா, தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சுமந்த் ஆஷ்வினுக்கு ஜோடியாக ஹேப்பி வெட்டிங் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
லஷ்மண் காரியா என்பவர் இயக்கியுள்ள இந்த படம், இன்றைய நவீன காதல் கதையில் உருவாகியிருக்கிறது. காதல் படம் என்பதால் காதலர் தினமான பிப்ரவரி 14-ந்தேதி இப்படத்தின் பஸ்ட்லுக் வெளியிடுகிறார்கள். மேலும், தெலுங்கில் இன்னும் தனக்கென ஒரு இடத்தை பிடிக்காத நிகாரிகா, இந்த ஹேப்பி வெட்டிங் படம் தன்னை முன்னணி நடிகையாக்கும் என்று பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக சொல்கிறார்.