கடந்தவாரம் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 96. ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கிய இப்படம், வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யாவும், இளம் வயது த்ரிஷாவாக கௌரி கிஷனும் நடித்திருந்தனர்.
ஆதித்யாவும், கௌரியும் ஒன்றாக இருக்கும் போட்டோ சமூக வலைதளத்தில் வெளியானதோடு, இருவரும் காதலிப்பதாகவும் செய்தி பரவியது. ஆனால் இதை இருவரும் மறுத்துள்ளனர்.
கெளரி கூறியதாவது : 96 படத்தில் நானும், ஆதித்யாவும் ராம் மற்றும் ஜானு கேரக்டரில் காதலர்களாக நடித்தோம். திரைக்கு பின்னால் இல்லை. எங்களைப் பற்றிய தவறான வதந்திகளை பரப்பாதீர்கள் என தெரிவித்திருக்கிறார்.