காணாமல் போன சிறுவர்களுக்காக போராடும் லதா — உதவி செய்வாரா ரஜினிகாந்த்?
இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். இவரின் கபாலி மாபெரும் சாதனை படைத்து வருகிறது.
இவரின் மனைவியான லதா பல சமூகநலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது இவர் சிறுவர்களுக்காக சிட்டிசன் பிளாட்பார்ம் என்ற அமைப்பை தொடங்கி உதவி வருகிறார்.
இதில் அபயம் கேர் பார்சில்ட்ரன் (Abhayam Care for Children) என்ற திட்டத்தின் மூலம் இதுவரை காணாமல் போன குழந்தைகளை தேடும்பணியில் ஈடுபடுத்தவுள்ளனர். இதற்காக சிறப்பு நிகழ்ச்சி நாளை சென்னை காமராஜ் அரங்கில் நடைபெறவுள்ளது.
இதில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கலந்து கொள்கிறார். ரஜினிகாந்த்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.