காணாமற் போனோர் அலுவலக்தை உருவாக்குவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி நேற்று கையொப்பம் இட்டுள்ளமை தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
இதன் ஊடாக நீண்ட காலமாக தங்களது உறவினர்களுக்கு என்னானது என்ற பதிலுக்காக காத்திருக்கும் மக்களுக்கு, தீர்க்கமான பதிலை வழங்க கூடியதாக இருக்கும் என்று நம்புவதாக, அமெரக்காவின் தூதுவர் அத்துல் கெசாப் மது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பதில் வழங்குவதற்கான முக்கியமான அடியை இலங்கை எடுத்து வைத்திருப்பதாக, கனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைட்டிங் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இதற்கான சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ள நிலையில், குறித்த அலுவலகத்துக்கான அதிகாரிகளை நியமிக்கும் பணிகள் அடுத்தக்கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளன