காசாவில் பொதுமக்களின்உயிர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து இஸ்ரேல் கவனம் செலுத்தவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இந்த வருட இறுதியுடன் இஸ்ரேல் ஹமாசிற்கு எதிரான தனது நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளவேண்டும் என கருதுகின்றீர்களா என்ற கேள்விக்குபொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து இஸ்ரேல் கவனம் செலுத்தவேண்டும் என நான் விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்
ஹமாசிற்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என தெரிவிக்கவில்லை கவனமாகயிருக்கவேண்டும் என பைடன்தெரிவித்துள்ளார்.
இதேவேளை காசாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களின் தீவிரதன்மையை குறைக்கவேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்துடன் வெள்ளை மாளிகை தனது முக்கிய அதிகாரியொருவரை இஸ்ரேலிற்கு அனுப்பிவைத்துள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக்சுலிவனே இஸ்ரேல் சென்றுள்ளார் – சுலிவன் இஸ்ரேலிய பிரதமர் உட்பட முக்கிய அதிகாரிகளை சந்தித்துள்ளார்.
பெஞ்சமின் நெட்டன்யாகும் ஜக்சுலிவனும் மிகவும்தீவிரமான தாக்குதல்களை குறைத்து ஹமாசினை துல்லியமாக இலக்குவைக்கும் தாக்குதல்கள் குறித்து பேச்சுவார்த்தைளை மேற்கொண்டுள்ளனர் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் தீவிரதன்மைகுறைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து ஆராயப்பட்டதாக வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார்.