காசாவில் 43 நாட்கள் தாக்குதல்கள் இடம்பெற்றவேளை படுகொலைகளை பார்த்ததாக பிரிட்டனை சேர்ந்த சத்திரசிகிச்சசை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் சுகாதார கட்டமைப்பை அழிப்பதே இஸ்ரேலின் யுத்தத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
லண்டனில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அல் அஹ்லி அராப் அல்சிபா மருத்துவமனைகளில் பயங்கரமான சம்பவங்களை பார்த்ததாக தெரிவித்துள்ள அவர் வெள்ளை பொஸ்பரஸ் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த படுகொலைகள் இடம்பெயுவதை நான் பார்த்திருக்கின்றேன் வாழத்தகுதியற்ற காசாவை உருவாக்குவதே முக்கிய நோக்கமாகயிருந்தது என குறிப்பிட்டுள்ள அவர் மருத்துவகட்டமைப்பு காணப்படும் நவீனவாழ்க்கையின் அனைத்து கூறுகளையும் அழிப்பதே இஸ்ரேலின் முக்கிய நோக்கமாக காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
ஆறுவாரங்கள் காசாவின் மருத்துவமனைகளிற்கு இடையில் மாறிமாறி சென்றுகொண்டிருந்தவேளை காயமடைந்தவர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் சிறுவர்கள் என்பது புலனாகியது என அவர் தெரிவித்துள்ளார்.
சில நாட்களின் பின்னர் நாங்கள் பொஸ்பரஸ் காயங்களை பார்த்தோம் என செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ள அபுசிட்டா 2009 இல் காசா பள்ளத்தாக்கில் வெள்ளை பொஸ்பரசினால் ஏற்பட்ட காயங்களிற்கு சிகிச்சை வழங்கியுள்ளேன் இம்முறை நான் பார்த்த காயங்கள் வெள்ளை பொஸ்பரசினால் ஏற்பட்ட காயங்களைஒத்தவையாக காணப்பட்டன எனவும் குறிப்பிட்டுள்ளார்.