காசாவில் ஒக்டோபரில் இடம்பெற்ற தாக்குதலொன்றிற்கு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
43 பொதுமக்கள் கொல்லப்பட்ட தாக்குதலிற்கு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துல்லியமாகஇலக்கை தாக்கும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக தனது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
காசாவின் மத்தியில்உள்ள டெய்ர் அல் பலாவை சுற்றியுள்ள பகுதிகளில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களிற்கான வெடிபொருட்கள் காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அமெரிக்காவின் பல ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் பயன்படுத்துகின்றது எனினும் குறிப்பிட்ட ஒரு தாக்குதலுடன் அமெரிக்காவின் ஆயுதங்களிற்கு தொடர்புள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தொடர்புபடுத்தியிருப்பது இதுவே முதல்தடவை.