காசாவில் இனப்படுகொலைகள் இடம்பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் இனப்படுகொலைகளில் ஈடுபடுவதாக தெரிவித்து தென்னாபிரிக்கா தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த சர்வதேசநீதிமன்றம் தனது உத்தரவினை வெளியிட்டுள்ளது.
இனப்படுகொலை என்பதற்குள் அடங்ககூடிய அனைத்துவகையான நடவடிக்கைகளையும் தடுத்துநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுக்கவேண்டும் என நீதிபதி ஜோன்டொனோகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலி;ய படையினர் இனப்படுகொலைகள் என கருதப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இஸ்;ரேல் தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
எனினும் தென்னாபிரிக்கா வேண்டுகோள் விடுத்தபடி இஸ்ரேல் காசாவில் தனது இராணுவநடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடவில்லை.
இஸ்ரேலின் நடவடிக்கைகள் தொடர்பிலான நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு இதுவல்ல என்ற போதிலும் பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலை ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என தாங்கள் கருதுவதை நீதிபதிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.