இஸ்ரேல் காசா மீதான தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் முழுமையான போர் குறித்த அச்சங்களிற்கு மத்தியில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 இலங்கையர்கள் தொடர்ந்து காசா பள்ளத்தாக்கில் சிக்குண்டுள்ளனர்.
இலங்கையர்கள் தற்போது தென்காசாவில் தஞ்சமடைந்துள்ளனர்,ஆனால் எகிப்திற்கு செல்லும் ரபா எல்லை தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதால் அவர்களை வெளியேற்ற முடியாத நிலையில் இலங்கை அதிகாரிகள் உள்ளனர்.
எகிப்திற்கு செல்வதற்கு இதுவே ஒரே வழி மேலும் இஸ்ரேலிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத ஒரேவழியாக இது காணப்படுகின்றது.
மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 இலங்கையர்களும் தற்போது பாதுகாப்பாக உள்ளனர் எனினும் மோசமான நிலையில் வாழ்கின்றனர்,எனபாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நவலகே பெனெட் குரே தெரிவித்துள்ளார்.
அந்த குடும்பங்களுடன் ரமல்லாவில் உள்ள தூதரகம் நாளாந்த தொடர்புகளை பேணுகின்றது.
இலங்கையர்களில் சிலர் அகதிமுகாமில் தஞ்சமடைந்துள்ளனர் ஒரு குடும்பம் கிறிஸ்தவ தேவலாயமொன்றில் தஞ்சமடைந்துள்ளது.
அவர்கள் பல நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் அருகில் குண்டுவீச்சுக்கள் இடம்பெறுகின்றன உணவு மருந்து குடிநீர் போன்றவற்றிற்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது,என தெரிவித்துள்ள தூதுவர் நாங்கள் அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.