‘என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் நடிகை அனுஷ்கா.
கவுதம் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அனுஷ்கா. இப்படத்திற்கு மீண்டும் கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் அனுஷ்கா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பாகுபலி 2’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அனுஷ்கா, தற்போது ‘பாக்மதி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கதாநாயகியை மையப்படுத்திய கதை. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. ‘பாக்மதி’ படத்தின் பர்ஸ்ட் லுக் அனுஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது. ‘பாக்மதி’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.
இந்நிலையில் அனுஷ்கா அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம். கவுதம் மேனன் இயக்கத்தில் தற்போது ‘துருவ நட்சத்திரம்’ உருவாகி வருகிறது. இதில் விக்ரம் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு அடுத்த பட வேலைகளை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.