ரகசிய அறையில் இருந்தபடியே கவினின் காதல் முகமூடியை கிழித்தெறிந்துள்ளார் இயக்குனர் சேரன்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறினார் சேரன். அவரிடம் நீங்கள் சீக்ரெட் ரூமுக்கு போக விருப்பமாக என பிக் பாஸ் கேட்டார். அதற்கு சேரன் விருப்பம் தெரிவிக்கவே, அவர் ரகசிய அறைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
கடந்த இரண்டு நாட்களாக ரகசிய அறையில் இருந்தபடியே ஹவுஸ்மேட்ஸ் அனைவரின் நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறார். ஆனால் இந்த விஷயம் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் யாருக்கும் தெரியாது. எனவே தன்னைப் பற்றி யார், என்ன பேசுகிறார்கள் என்பதை சேரன் தீவிரமாக கவனித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றைய எபிசோடின் போது லாஸ்லியாவும், கவினும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது லாஸ்லியாவிடம் காதல் விவகாரம் பற்றி பேசினார் கவின். இதனை ரகசிய அறையில் இருந்து பார்த்த சேரன், தனது மைக் மூலம் ஆடியன்சிடம் பேசினார். “காதல் விவகாரம் பற்றி பிக் பாஸ் வீட்டிற்குள் பேசமாட்டோம் என கவினும், லாஸ்லியாவும் சத்தியம் செய்துள்ளனர். ஆனால் லாஸ்லியாவிடம் அதை பற்றி கவின் பேசுகிறார். அவர் நாமினேட் செய்யப்பட்டுள்ளதால் இதனை ஆரம்பிக்கிறார்”, எனக் கூறினார்.
இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கவினின் முகமூடியை சேரன் கிழித்துவிட்டதாகவும், அவரது சீக்ரெட் ரூம் டாஸ்க் வெற்றி பெற்று விட்டதாகவும் பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.