கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’ தமிழ்ப் பேராயம் வழங்கியது
அக்டோபர்.22. சென்னை காட்டங்குளத்தூரிலுள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்ப்
பேராயத்தின் எட்டாம் ஆண்டுவிழாவில், கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு ‘புதுமைப்பித்தன்
படைப்பிலக்கிய விருதினை’தும், பரிசுத் தொகை ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டன.
இவ்விழாவிற்கு, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், பெரம்பலூர்
நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தா.ரா.பாரிவேந்தர் தலைமையேற்றார். தமிழ்ப் பேராயத்தின்
தலைவர் முனைவர் கரு.நாகராஜன் வரவேற்புரையாற்றினார்.
திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து, ‘கங்காபுரம்’ எனும் வரலாற்று நாவலை எழுதிய
அ.வெண்ணிலாவுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருருதினை’யும், பரிசுத்தொகை ரூ.50 ஆயிரத்தையும்
வழங்கி கவுரவித்தார். தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் விழாப்பேருரையாற்றினார்.
இவ்விழாவில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக இணைவேந்தர் இரவி பச்சமுத்து, தலைவர் சி.நிரஞ்சன், பதிவாளர்
முனைவர் சு.பொன்னுசாமி, துணைவேந்தர் செ.முத்தமிழ்ச்செல்வன், பேராசிரியர்கள் பா.ஜெய்கணேஷ்,
தி.ஞா.நித்யா, வே.பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
படக்குறிப்பு :
காட்டங்குளத்தூரிலுள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்ப் பேராயத்தின் எட்டாம்
ஆண்டுவிழாவில், கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு ‘புதுமைப்பித்தன்
படைப்பிலக்கிய விருது’ம், பரிசுத்தொகை ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டபோது எடுத்த
படம். அருகில், கவிஞர் வைரமுத்து, வேந்தர் பாரிவேந்தர், தவத்திரு பொன்னம்பல
அடிகளார் ஆகியோர் உள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]