இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்து கொண்ட திராவிட் பேசும்போது, “விளையாட்டு என்பது நாம் எப்படி களத்தில் செயல்படுகிறோம் என்பதைப் பொறுத்தது. அதற்காக விராட் கோலியைப் போல நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.
விளையாட்டு மைதானத்தில் கோலியின் நடவடிக்கைகள் என்பது அவரின் தனிப்பட்ட குணம். நீங்கள் ஏன் கோலியைப் போன்று நடந்து கொள்வதில்லை என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்… நானும் கோலியைப் போன்று டாட்டூ போட்டுக்கொண்டு அவரைப் போன்று செயல்பட்டிருந்தால் அது என்னுள் இருந்த சிறந்த விளையாட்டை வெளிக் கொண்டு வந்திருக்காது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய தொடரில் விராட் கோலியின் மோசமான செயல்பாடுகளை களத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதனை செய்தித்தாள்களில் படிக்கும்போது நான் பயந்திருக்கிறேன். ஆனால் பிறகு யோசித்துப் பார்த்தேன்.
உண்மையில் கோலி அவர் வழியில் விளையாட்டை நேசிக்கிறார். அதன் மூலம் அவருடைய சிறந்த விளையாட்டை அவர் வெளிக்கொண்டு வருகிறார். ஆனால் இது அனைவருக்கும் பொருந்தும் என்று கூற முடியாது.
ரஹானே மிகவும் வித்தியாசமானவர். அவர் அவருடைய வித்தியாசமான அணுகுமுறையில் அவருடைய சிறந்த விளையாட்டை வெளிக்கொண்டு வருகிறார். நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை கொண்டு செயயல்பட வேண்டும். அதுதான் முக்கியமானது என்று நினைக்கிறேன்” என்று திராவிட் என்றார்.