திருகோணமலை குச்சவெளி கல்லராவ கடற்கரையில் இறந்த நிலையில் சுறா ஒன்றில் உடல் கரை ஒதுங்கியுள்ளது.
நேற்று காலை பதினைந்து அடியுடைய பெரிய சுறா ஒன்று கரையோதுங்கியுள்ளது.
இறந்த சுறாவின் உடலை அகற்றி கரைக்கு கொண்டு வந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் பத்திற்கும் மேற்பட்ட சுறாக்கள் உயிருடன் கரையோதுங்கியதும் குறிப்பிடத்தக்கது.