கல்கிசை பகுதியில் 28 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது
Articles Tagged Under: சடலம் | Virakesari.lk
கல்கிசை டெம்பிள்ஸ் வீதியில் உள்ள குறுக்கு வீதியில் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 28 வயதுடைய படோவிட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் தெஹிவளை நெடிமால பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் சாரதியாக கடமையாற்றியவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், கல்கிசை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.