கொழும்பு சிலாபம் பிரதான வீதியின் கல்கந்த புகையிரத கடவை அருகில் இடம்பற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாதாசாரி ஒருவர் மீது கொள்கலன் ஒன்று மோதியதன் காரணமாகவே விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயங்களுக்குள்ளான குறித்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொள்கலன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் முன்னெடுத்தது வருகின்றனர்.