கலைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! சூர்யா பிரம்மாண்ட ஏற்பாடு!
நடிகர் சூர்யா படங்களில் பிசியாக இருந்தாலும், தனது மற்ற கடமைகளையும் சிறப்பாக செய்து வருகிறார். அவரது தந்தையான சிவக்குமாரின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் வரைந்த 100 சிறப்பான ஓவியங்களை தேர்ந்தெடுத்து கண்காட்சிக்காக வைத்தனர்.
தற்போது சூர்யா கூறுவதாவது கண்காட்சி நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. இதற்கு பலபேர் வந்திருந்து பார்த்து சென்றார்கள். இனி அப்பாவின் ஒவ்வொரு பிறந்த நாளை முன்னிட்டும் இனி பெரிய ஓவிய போட்டி நடத்தப்படும்.
இதில் சிறப்பான ஓவியரை தேர்ந்தெடுத்து அப்பாவின் பெயரால் விருது கொடுக்கப்படும் என கூறியுள்ளார். இதனை பல ஓவியக்கலைஞர்களும், பல கலை ஆர்வலர்களும், ரசிகர்களும் வரவேற்றுள்ளனர்.
advertisement