கலாம் நினைவாக நடிகர் விவேக் நடத்திய அமைதி பேரணி
வரும் 27ம் தேதியுடன் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இறந்து ஓராண்டு ஆகிறது. அவரின் நினைவு நாளையொட்டி நடிகர்விவேக்கின் கிரீன் கலாம் அமைப்பின் சார்பில் இன்று சென்னையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை முதல் காந்தி சிலை வரை பேரணி நடைபெற்றது. பேரணியில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் பேசிய விவேக், 1 கோடி மரக்கன்றுகளை நீங்கள் நட வேண்டும் என்று கலாம் அய்யா என்னிடம் கூறினார். அதன்படி இதுவரை 24 லட்சத்து 75 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுள்ளேன். 1 கோடி இலக்கை மனதில் வைத்து செயல்படுகிறேன் என்று தெரிவித்தார்.