கலப்பு நீதிமன்றம் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அறிவிப்பார்!
மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக இலங்கையில் கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிப்பது தொடர்பான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைன் ஜூன் மாதம் 29ம் திகதி அறிவிப்பார் என தெரியவருகிறது.
கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச நீதிபதிகளை கொண்ட கலப்பு நீதிமன்றம் அவசியம் என்ற நிலைப்பாட்டில், அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலும் இருப்பதாக கூறப்படுகிறது.
இலங்கை தொடர்பான ஜெனிவா யோசனையின் இணை அனுசரணையாளர் என்ற வகையில், யோசனையை முழுமையாக செயற்படுத்தும் நிலைமை இலங்கைக்கு உருவாகியுள்ளது.
இதனிடையே ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று உரையாற்றிய ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி மோனிகா விஸ்டோ இலங்கையில் மேலும் மறுசீரமைப்புகள் நடைபெற வேண்டும் எனவும் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை சம்பந்தமாக தான் முழுமையாக அறிக்கையை பேரவையில் சமர்பிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்