தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கிய ஸ்ரேயா, கதாநாயகியாக இருந்து, குணசித்திர நடிகையாக மாறி, தற்போது அந்த வாய்ப்பும் இல்லாமல் தெலுங்கு படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். மஞ்சு விஷ்ணு நடித்துள்ள காயத்ரி என்ற படத்தில் ஸ்ரேயாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் நீண்ட இடைவேளையின் பின்னர் ஸ்ரேயாவுடன் இணைந்து மோகன்பாபுவும் நடித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து, தமிழில் நரகாசூரன் படத்தில் நடித்து வருகிறார். இதில் காயத்ரி என்ற படம் பெப்ரவரி 9-ம் திகதி திரைக்கு வருகிறது. இதையடுத்து, இசைஞானி இளையராஜா இசையமைப்பில் சுஜானா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ஸ்ரேயா.
இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது. இந்த படத்தில் சேரியில் வாழும் கூலித் தொழிலாளியாக நடிக்கிறார் ஸ்ரேயா. இந்த படத்தில் அப்பாவி பெண்ணாக நடிக்கவிருக்கும் ஸ்ரேயா இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமாக அமைந்திருக்கிறார். அதில் இவர் முதன்முறையாக அழுக்கு உடையணிந்து கறுப்பு நிறத்திற்கு மாறி நடிக்கப்போகிறாராம்.