இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் வாழ்வில் ஆறாவடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை இடம்பெற்று 38 வருடங்கள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்பு ஜூலை மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட மோதலின் போது தமது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு கனடா அரசாங்கத்தின் சார்பாக தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டு ஆயுதமோதல் முடிவடைந்த நிலையில் நாட்டில் அனைவருக்கும் நீடித்த அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைய நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரு அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் செயன்முறை தேவைப்படுகிறது என்றும் அதற்கு கனடா தொடர்ந்தும் ஆதரவை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.