கறுப்பு கனடியர்கள் உங்களிற்கு ஒரு வேளை தெரியாது ஆனால் தெரிய வேண்டும்.
ரொறொன்ரோவின் முதலாவது தபால் கெரியர்.இவரின் தாயார் அமெரிக்காவில் அடிமையாக இருந்து நிலக்கீழ் ரயில்வே மூலம் 1858ல் தனது ஆறு பிள்ளைகளுடன் ரொறொன்ரோ வந்தவர்.
ஜக்சன் ரொறொன்ரோவில் கல்வி பயின்று தபால் ஊழியர் பதவிக்கு 1882ல் விண்ணப்பித்தார். பயிற்சி பெறுவதில் இன்னல்கள் ஏற்பட்டன. வெள்ளை பணியாளர்கள் இவரது பதவிக்கு பயிற்சி அளிக்கவோ அல்லது இவருடன் பணிபுரியவோ மறுத்தனர்.
இதன் நிமித்தம் தபால் ஊழியர்கள் போராட்டம் நிகழ்த்தினர்.கறுப்பு இனத்தவர்களும் ஒன்றாக அணிதிரண்டதால் உள் ஊர் அரசியல்வாதிகள் ஜக்சனிற்கு பயிற்சி அளிக்க உறுதியளித்தனர்.
தேர்தல் சமயம் இச்சம்பவம் நடந்ததால் அப்போதய லிபரல் வேட்பாளர் பிரதம மந்திரி சேர் ஜோன் யு. மக்டொனால்டை அணுகியமையால் ஜக்சன் இறுதியில் பயிற்சி அளிக்கப்பட்டு நகரின் முதலாவது தபால் கெரியராக நியமிக்கப்பட்டார்.
2-பிவெர்லி மஸ்கொல்
Mascollஅழகு சாதன பொருட்கள் நிறுவனர்.
நோவ ஸ்கோசியாவில் பிறந்த இவர் வாலிப வயதில் ரொறொன்ரோ வந்து பார்பர் மற்றும் அழகு சாதன பொருட்கள் நிறுவனத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்தார். கறுப்பு பெண்களிற்கு அழகு சாதன சேவைகளிற்கு ஒரு கறுப்பு இன பெண் தேவை என மஸ்கொல் கண்டறிந்தார்.
1970ல் மஸ்கொல் தனது சொந்த கம்பனியை- மஸ்கொல் அழகு சாதன லிமிடெட்டை 700டொலர்களிற்கு ஏற்படுத்தினார். கறுப்பு இன பெண்களை இலக்கு வைத்து தனது அழகு சாதன பொருட்களை விற்பனை செய்தார். படிப்படியாக யு.எஸ். ஜோன்சன் தயாரிப்பு உற்பத்தியாளர்களை நிறுவனத்தின் முதலாவது மற்றும் ஒரே கனடிய விநியோகஸ்தர் உரிமையை தனக்கு வழங்க வற்புறுத்தினார்.
மஸ்கொல்சின் அழகு சாதன விற்பனை சங்கிலி தொடர் கிளைகள் காலப்போக்கில் ஒரு மல்ரி மில்லியன் டொலர் வர்த்தகமாக மாறியது.
1998ல் இவர் சிறந்த தொழில் முனைவர் மற்றும் கனடிய இளைஞர்களிற்கு உதவுபவர் என்பதற்கான ழுசனநச ழக ஊயயெனய அங்கத்தவராக நியமனம் பெற்றார்.
3-லியோனா மற்றும் ஆஸ்கர் புறூரன்
வணிக உரிமையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.
இவர்கள் இருவரும் முதலாவது உலக போரின் பின்னர் ஒகையோவிலிருந்து ரொறொன்ரோ வந்தனர்.
ஆஸ்கர் ஒரு பாதநோய் வைத்தியர். லியோனா அழகு பள்ளியையும் முடி திருத்த நிலையத்தையும் நடாத்திவந்தனர்;. இருவரும் தம்பதியர்.சமுதாய இளைஞர்களிற்கு இருவரும் பெருமளவில் உதவிவந்தனர்.
4-வயலெட் கிங்.
முதலாவது கறுப்பு கனடிய பெண் வழக்கறிஞர்.
1953ல் அல்பேர்ட்டா பல்கலைக்கழக சட்ட துறை வளாகத்தில் பட்டம் பெற்று கனடாவின் முதல் கறுப்பு பெண் வக்கீல் ஆனார். குற்றவியல் சட்ட துறை பயிற்சி பெற்றவர்.ஒட்டாவா சென்று குடிவரவு மற்றும் குடியுரிமை திணைக்களத்தில் பணிபுரிந்தார்.
5-வின்சரின் கறுப்பு இன பெண்
“The Mothers’ Club” என அழைக்கப்படும் கிளப்பை 1934ல் வின்சரில் கண்டுபிடித்தார்.