கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கையில் கறுப்புஜூலையில் உயிர்பிழைத்தவர்களை சந்தித்துள்ளார்.
இதனை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மனதை நெகிழவைக்கும் காலை, கறுப்பு ஜூலையின் பயங்கரமான வன்முறைகளில் இருந்து உயிர்தப்பியவர்களின் கதைகளை செவிமடுத்தேன் என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கதைகளை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி உங்கள் வலிமை உங்களின் நம்பிக்கை மீண்டும் எழும் திறன் ஆகியவற்றை ஒருபோதும் நான் மறக்கமாட்டேன் எனவும் அவர் பதிவி;ட்டுள்ளார்.
