நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தான் கர்ப்பமாக உள்ளதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து பிரதமராக உள்ள ஜெசிந்தா ஆர்டர்ன்,37, 1856-ஆம் ஆண்டுக்கு பிறகு, நியூசிலாந்தின் இளம் பிரதமராக உள்ளார். இவர் தான் கர்ப்பமாக உள்ளதாக அறிவித்துள்ளார். அவரும், அவரது கணவர் கிளார்க் கேபோர்ட்டும் தங்களுடைய குழந்தை ஜூன் மாதம் பிறக்கும், அப்போது ஆறு வாரகால விடுப்பு எடுக்கவுள்ளேன். ‘2017-ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்தது என்று எண்ணியிருந்தோம், என்று தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டிருந்தார்.
கர்ப்பமாக இருப்பதாக ஆர்டர்ன் அறிவிப்பு வெளியிட்டபிறகு, அவரது சமூகவலைதள கணக்குகளில் ஏரளாமான வாழ்த்து செய்திகள் குவிந்துள்ளன.