கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான, ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி, ஏப்ரல் மாதத்திற்குள் உருவாக்கப்படலாம் என இந்திய மருத்துவக் குழு தலைவர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் இரண்டு அல்லது மூன்று நிறுவனங்கள் உள்ளன. ஆனால் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி தயாரிப்பதற்கான கட்டுப்பாட்டாளர்களின் அனுமதியை ஏற்கனவே பெற்றுள்ளது. 2023ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்த தடுப்பூசி கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.