தீக்கிரையான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த கொள்கலன்களில் அடங்கியிருந்த பொருட்கள் மற்றும் எரியுண்ட கப்பல் பாகங்கள் உள்ளிட்டவை நேற்று நீர்கொழும்பை அண்டிய கடற்கரை பகுதிகளில் கரையொதுங்கியிருந்தன.
இவ்வாறு கரையொதுங்கிய, இரசாயனங்கள் உள்ளிட்ட மேலும் சில பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச்சென்ற நபர்களைத் தேடி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறி எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலிலிருந்து கரையொதுங்கிய பொருட்களை எடுத்துச் சென்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் பாரவூர்தியொன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.